யாழ்.வல்வெட்டித்துறையில் நாளை இரத்ததான முகாம்: குருதிக் கொடையாளர்களுக்கு அழைப்பு!!

வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை உதவும் இளைஞர்கள் அமைப்பின் அனுசரணையில் நாளை சனிக்கிழமை(05-09-2020) வல்வெட்டித்துறை சந்தியிலுள்ள மரக்கறிச் சந்தையின் மேல்மாடியின் அமைந்துள்ள நகர மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளது.
காலை-08.30 மணி முதல் இடம்பெறவுள்ள குறித்த இரத்ததான முகாமில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாகச் சென்று இரத்தம் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, இந்த இரத்ததான முகாமில் ஆர்வமுள்ள அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும் கலந்து கொண்டு உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”