;
Athirady Tamil News

பாரமுல்லா என்கவுண்டர்- 5 மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை..!!

0

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம், எடிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் அந்த பகுதிக்கு சென்று அங்கிருந்த மக்களை பாதுகாப்புடன் வெளியேற்றினர். இதன்பின் அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. ஏறக்குறைய 5 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு கொன்றனர். ராணுவ அதிகாரி மற்றும் ஒரு போலீஸ்காரர் காயமடைந்து உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 9 =

*