;
Athirady Tamil News

கொரோனா பாதிப்பில் உலக அளவில் 2-ம் இடத்தை நோக்கி இந்தியா- பிரேசிலை நெருங்கியது !! (வீடியோ, படங்கள்)

0

கொரோனா மொத்த பாதிப்பில் உலக அளவில் 2-வது இடத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,67,95,847. இதில் அமெரிக்காவில் மட்டும் மொத்தம் 63,89,057 பேருக்கு பாதிப்பு உள்ளது. 2-வது இடத்தில் தற்போது பிரேசில் உள்ளது. பிரேசிலில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,91,801.

பிரேசில் 2-வது இடம் இதற்கு அடுத்ததாக 3-வது இடத்தில் உள்ள இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,23,179. பிரேசிலை ஒப்பிடுகையில் சுமார் 60,000 எண்ணிக்கையில் இந்தியா பின் தங்கி உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை நாள்தோறும் 80,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

2-வது இடம் நோக்கி இந்தியா?

இதனால் தற்போதைய பாதிப்பு நிலை தொடர்ந்தால் உலக அளவில் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்துக்கு இந்தியா நகர்ந்துவிடும் சூழ்நிலை இருக்கிறது. பிரேசிலைப் பொறுத்தவரை 10 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக கொரோனா பாதிப்பு உயர மொத்தம் 75 நாட்களானது. அமெரிக்காவில் 86 நாட்களுக்குப் பின்னர்தான் இந்த எண்ணிக்கை வந்தது. ஆனால் இந்தியாவில் 50 நாட்களிலேயே கொரோனா பாதிப்பு 10 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 13 நாட்களில் இந்தியாவில் 30 லட்சமாக இருந்த பாதிப்பு 40 லட்சமாக அதிகரித்திருக்கிறது.

உலகில் மிக அதிகவேகத்தில் இந்தியாவில்தான் கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனா உயிரிழப்பில் 3-வது இடம் கொரோனா உயிரிழப்பில் 3-வது இடம் இன்னொரு பக்கம் கொரோனா மரணங்களில் தற்போது இந்தியா உலக அளவில் 3-வது இடத்தில் இருக்கிறது. உலக நாடுகளில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 8,78,963. இதில் அமெரிக்காவில் மட்டும் 1,92,111 பேர் இறந்துள்ளனர். அடுத்ததாக பிரேசிலில் 1,25,584 பேரும் இந்தியாவில் 69,561 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 4-வது இடத்தில் மெக்சிகோ உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கசாயத்தை குடிங்க.. ஆயுர்வேத டாக்டர் கவுதமன் சொன்ன சூப்பர் அட்வைஸ் மெக்சிகோவில் அதிகரிப்பு மெக்சிகோவில் அதிகரிப்பு மெக்சிகோவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது 66,851. மெக்சிகோவில் கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளில் அந்த நாடு 3-வது இடத்துக்கு நகரும் நிலை உள்ளது.



You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 1 =

*