;
Athirady Tamil News

வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை.!! நாட்டின் வானிலையில் திடீர் மாற்றம்!

0

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் காற்று வீசக்கூடுவதுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

நாளை (06ஆம் திகதி) பெந்தோட்டை, மீகம, தொடம்பபிட்டிய, பெலவத்தை, போதகம மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 13 =

*