;
Athirady Tamil News

பெட்ரோல் பங்க் மீட்டரில் கம்ப்யூட்டர் சிப் பொருத்தி முறைகேடு- மேலாளர் கைது..!!

0

பெட்ரோல் பங்குகளில் வழங்கப்படும் பெட்ரோல், டிசலின் அளவு துல்லியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக நவீன மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களும் அந்த மீட்டர்களை பார்த்து திருப்தி அடைகின்றனர். ஆனால், ஒரு சில பங்குகளில் இந்த மீட்டர்களிலும் தில்லுமுல்லு செய்து பெட்ரோல் அளவை குறைத்து வழங்கி முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்.

அவ்வகையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பட்டூர் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் முறைகேடு நடப்பதாக காவல்துறைக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெட்ரோல் வழங்கும் இயந்திரத்தில் கம்ப்யூட்டர் சிப் பொருத்தி பெட்ரோல் அளவை குறைத்து வழங்கி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சிப் மூலம் ஒரு லிட்டருக்கு 40 மில்லி அளவுக்கு பெட்ரோல் குறைத்து வழங்கப்பட்டுள்ளதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து பெட்ரோல் பங்க் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர், மேலாளர் மற்றும் கம்ப்யூட்டர் சிப் விற்பனை செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது என டிஎஸ்பி ஈஸ்வர் ரெட்டி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 11 =

*