;
Athirady Tamil News

எம்.சீ.சீ உடன்படிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பதா இல்லையா? தீர்மானம் அடுத்தவாரம்!!

0

அமெரிக்காவின் எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பு காரணமாக அதனைத் தொடர்ந்தும் முன் னெடுப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க எம்.சீ.சீ உடன்படிக்கை திட்டத்தின் பணிப்பாளர் சபை அடுத்த வாரம் வொஷிங்டனில் கூட வுள்ளது.

இந்நிலைமை குறித்து அடுத்த வாரம் நடைபெறும் கலந்துரையாடல் தீர்க் கமான முடிவாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மிலேனியம் சவால் ஒப்பந்தம் (எம்.சி.சி) முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க எம்.சி.சி.யின் பணிப்பாளர் சபை அடுத்த வாரம் வொஷிங்டனில் கூடவுள்ளது.

அமெரிக்காவின் எம்.சீ.சீ. திட்டத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட நாடு களின் அபிவிருத்திக்காக நிதியுதவியை வழங்கி வருவதுடன் இலங் கைக்கு 480 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொடுப்பதற்காக இலங் கையிடம் அந்த உடன்படிக்கை சமர்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த உடன்படிக்கை தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பு காரணமாக இதுவரை உடன்படிக்கை நடைமுறைப்படுத்தவில்லை.

பின்னர் இந்த உடன்படிக்கை தொடர்பாக ஆராயப்பட்ட நிபுணர்கள் குழு, உடன்படிக்கையின் சில நிபந்தனைகள் நாட்டின் பொது சட்டத்திற்கு மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என தெரிவித்துள்ளது.

இதனையடுத்து உடன்படிக்கை தொடர்பான செயற்பாடுகள் செயலிழந்தன.

இந்த நிலைமை குறித்து அடுத்த வாரம் நடைபெறும் கலந்துரையாடல் தீர்க்கமான ஒன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 13 =

*