வீதி காப்பற் இடும் பணி ஆரம்பிப்பு!! (படங்கள்)
வவுனியா வேப்பங்குளம் 5 ஆம் ஒழுங்கைக்கு காப்பற் இடும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் மற்றும் நகரசபை உறுப்பினர்களான லரீப்,மற்றும் பாரியின் முயற்சியினால் ஆர்,ஐ,டி,பி திட்டத்தின் கீழ் 9.5 மில்லியன் செலவில் குறித்த வீதி காப்பற் இடும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள்,நகரசபை உறுப்பினர்களான லரீப் மற்றும் பாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”