;
Athirady Tamil News

ஒலிம்பியாட் மற்றும் கணித திறனாய்வு போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு!! (படங்கள்)

0

2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தேசிய அளவில் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்த மாணவர்கள், ஒலிம்பியாட் மற்றும் கணித திறனாய்வு போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நல்லூர் – செம்மணி வீதியில் அமைந்துள்ள தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிக்கள நிலையம் மற்றும் மீன்பிடியியல் துறைத் தலைவர் பேராசிரியர் சிவசாந்தினி குகநாதன் தலைமையில் இடம்பெற்ற இவ் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜ் கலந்து கொண்டார்.

2019ஆம் ஆண்டு கா.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில்(பழைய பாடத்திட்டம்) தேசிய ரீதியில் 1ஆம் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ். வேம்படி மகளீர் உயர்தர பாடசாலை மாணவி கே.அபர்னா, விஞ்ஞான பிரிவில் தேசிய ரீதியில் 2ஆம் இடத்தினை பெற்றுக் கொண்ட யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் ஜே.கிருஸ்திகன், விஞ்ஞான பிரிவில் தேசிய ரீதியில் 9ஆம் இடத்தை பெற்ற யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவி எம்.நிவேதா, விஞ்ஞான பிரிவில் தேசிய ரீதியில் 10ஆம் இடத்தினை பெற்றுக் கொண்ட யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் எஸ்.தர்சிகன், கலைப்பிரிவில் தேசிய ரீதியில் 2ஆம் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ஜீ.நிலக்சன், பொறியல் தொழிநுட்ப பிரிவில்(பழைய பாடத்திட்டம்) தேசிய ரீதியில் 4ஆம் இடத்தினை பெற்றுக் கொண்ட யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவன் வீ.ராகவன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் சர்வதேச ஒலிம்பியாட் கணித போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களான யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவி எஸ்.மேனுசா, யாழ். இந்துக் கல்லூரி மாணவன் எஸ்.கலாபன், கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களான ரி.திருக்குமரன், ஏ.கிருசோந் ஆகிய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் தேசிய ரீதியில் கணித போட்டியில் பங்குபற்றி முதல் இடத்தை பெற்றுக் கொண்ட மாணவர்களான சவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஜீ.சந்தியன், அருனோதயா கல்லூரி மாணவன் எம்.அபிசயன், யாழ். இந்துக் கல்லூரி மாணவன் எஸ்.அபிசாயீசன், ஹாட்லிக் கல்லூரி மாணவன் கே.அபிநயன், வவுனியா ரம்பைக்குளம் பெண்கள் பாடசாலை மாணவி பி.கரிணி, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்களான எம்.ஜதூர்சன், ஜே.லீவீந்த், கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களான ரி.திருக்குமரன், வி.தனிகைக்குமரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இவ் கௌரவிப்பு நிகழ்வில் தொண்டமனாறு வெளிக்கள நிலைய உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − eleven =

*