;
Athirady Tamil News

வவுனியாவில் இறைச்சிக்காக கடத்திச்செல்லப்பட்ட மாடுகள் மீட்பு!! (படங்கள்)

0

வவுனியா – நெடுங்கேணியில் இருந்து மதவாச்சி நோக்கி இறைச்சிக்காக கடத்திச்செல்லப்பட்ட 11 மாடுகளை மடுக்கந்த பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த மாடுகள் நெடுங்கேணியிலிருந்து மாமடுப்பகுதியூடாக மதவாச்சி நோக்கி கொண்டு செல்லப்படவிருந்த நிலையில் இன்று மடுகந்தைப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவற்றை மீட்டுள்ளனர்.

அனுமதிப்பத்திரம் இன்றி முறையான நடைமுறைகளை பேணாமல் குறித்த மாடுகள் கொண்டுசெல்லப்பட்டிருந்ததாக தெரிவித்த பொலிஸார் அவற்றை கடத்திச்செல்ல பயன்படுத்தப்பட்ட கப் வாகனத்தையும், இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 18 =

*