;
Athirady Tamil News

கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!!

0

கோவிட் -19 கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டி ருந்த அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைக்காக எதிர்வரும் 8ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழமை போல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ள தாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல கட்டங்களாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் ஆரம்ப வகுப்பு களின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப் படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெ ரேரா தெரிவித்தார்.

செப்டெம்பர் 02ஆம் திகதி தொடக்கம், 06 முதல் 13 ஆம் வகுப்பு வரையி லான கல்வி நடவடிக்கைகள் வழக்கம் போல் ஆரம்பமாகியது.

ஆரம்ப வகுப்புகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் நாளை பாடசாலைக்கு வருவார்கள் எனவும் கல்வி நடவடிக்கைகள் வழமைப் போல நாளை முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாடசாலை மாணவர்கள் சுகாதார வழிகாட்டுதல் களை பின்பற்றுவதை தவிர்க்கின்றனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தார்.

சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் நாட் டில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக தொற்று நோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத் தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + five =

*