மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; தொற்றாளர்கள் 3,121 ஆக உயர்வு!!

நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 06 பேர் அடையாளம் காணப்பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து வருகை தந்த மூவரும், பஹ்ரைன் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த இருவரும், தனிமைப்படுத்தலுக் குட்படுத்தப்பட்டிருந்த ஒருவர் ஆகியோரே இவ்வாறு புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளதோடு , 2ஆயிரத்து 918 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணகுணமாகி வீடு திரும்பியுள்ளனர் என தொற்றுநோயில் பிரிவு தெரிவித்துள்ளது.