;
Athirady Tamil News

நாமல்ராஜபக்ச ஜனாதிபதிதேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்காகவே 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டது – பிரசன்ன ரணதுங்க!!

0

ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் போட்டியிடுவதற்கான வயதெல்லையை 35 லிருந்து 30 ஆக குறைக்கவேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் நோக்கத்திலேயே 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

மகளிர் மற்றும் இளைஞர் அபிவிருத்தி குறித்து நாங்கள் பேசுகின்றோம் ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவது இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லையை குறைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தில் காணப்படுகின்ற மக்களுக்கு நன்மையளிக்க கூடிய விடயங்கள் 20வது திருத்தத்திலும் இடம்பெறும் ஜனாதிபதி ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் பதவி வகிக்கமுடியாது என்ற கட்டுப்பாடு தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + ten =

*