ஜனநாயகத்தை பாதுகாக்க ஐக்கியதேசிய கட்சியை ஐக்கியப்படுத்துவது வலுப்படுத்துவது அவசியம்- ருவான்!!

ஐக்கியதேசிய கட்சியையும் அதன் அடையாளத்தையும் மேலும் 100 ஆண்டுகளுக்கு பாதுகாப்பதற்காக கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றுபடுமாறு கட்சியின் பிரதிபொதுசெயலாளர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கியதேசிய கட்சியின் 75வது ஆண்டு தினமான இன்று அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அழிவிற்கும் தோல்விக்கும் மத்தியில் நாங்கள் உறுதியாக நிற்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவர் மலை உச்சியை அடைந்ததும் பள்ளதாக்கில் வீழ்வார் என்பது நிச்சயமான விடயம் என குறிப்பிட்டுள்ள உச்சியில் நிற்பதற்கு பலமில்லாவிட்டால் அவர்கள் பள்ளத்தாக்கில் வீழ்வார்கள் ஐக்கியதேசிய கட்சி அவ்வாறான தோல்வியை சந்தித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கட்சி தனது தவறுகளை அடையாளம் கண்டு அதனை திருத்திக்கொள்வது அவசியம் என ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கியதேசிய கட்சியின் அனைத்து தரப்பினரையும் ஐக்கியப்படுத்தி வெற்றியை நோக்கி செல்லவேண்டும்,நாட்டின் ஜனநாயகத்தினை பாதுகாக்க இது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.