;
Athirady Tamil News

அமெரிக்காவின் உதவி திட்டங்களால் இலங்கையின் இறைமைக்கு ஆபத்தில்லை- அமெரிக்க தூதுவர்!!

0

அமெரிக்காவின் உதவி திட்டங்கள் எவையும் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டவையல்ல என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.
பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பரஸ்பரம் இறைமையை மதித்து பாதுகாப்பதே வலுவான ஒத்துழைப்பு என குறிப்பிட்டுள்ள அவர் துரதிஸ்டவசமாக எங்களின் பல திட்டங்கள் மற்றும் ஈடுபாடுகள் குறித்து சமீபகாலங்களில் பிழையான கருத்து காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
ஆனால் எங்களின் எந்த திட்டங்களும் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்துபவையல்ல என குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திட்டங்களை உருவாக்குவது நடைமுறைப்படுத்துவதில் நாங்கள் மிகுந்த வெளிப்படை தன்மையுடன் செயற்படுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட கால ஜனநாயக வரலாற்றில் தங்கியிருப்பதன் மூலமும் இலங்கையின் ஜனநாயக கட்டமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலமும் கொரோனாவின் தாக்கங்களில் இருந்து இலங்கை வேகமாக முடியும் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*