;
Athirady Tamil News

ஹட்டன் பொலிஸ் அதிகாரிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை!!

0

ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் 9 ஆம் திகதி இன்று ஹட்டன் டிக்கோயா நகராட்சி மன்ற மண்டபத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் அதிகாரியின் காரியாலயத்தில் தொற்று நோயியல் பிரிவு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, ஹட்டன் பொலிஸ் வலையத்தின் கீழ் இயங்கும் ஹட்டன், கினிகத் தேனை, வட்டவலை, நோட்டன் பிரீஜ், மஸ்கெலியா, நோர்வுட், பொகவந்தலாவ, நல்ல தன்னி, ஆகிய எட்டு பொலிஸ் நிலையங்களில் பணிபுரிகின்ற பொலிஸ் உத்தியோகஸ் தர்களின் கடமைகளுக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் பி. சி. ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் அதிகாரியின் காரியாலயத்தினால் இது வரை நுவரெலியா மாவட்டத்தில் பல முக்கிய நகர்ப்புறங்களில் ஏராளமான அரச மற்றும் தனியார்த் துறை ஊழியர்களுக்கு பி.சி. ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − nine =

*