இணையம் மூலம் இடம்பெற்ற மோசடி!!

புதிய கையடக்க தொலைப்பேசிகளை மலிவு விலையில் விற்பதாக தெரிவித்து, இணையத்தை பயன்படுத்தி விளம்பரம் செய்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை, தலகஹ பகுதியில் வைத்து தென் மாகாண கணனி வழி குற்றங்களை தடுக்கும் பிரிவால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
32 மற்றும் 26 வயதான ஆண், பெண் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாத்தறை நீதவான் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.