இலங்கை ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்தும் நாடாக மாறிவருகின்றது- ஐக்கிய மக்கள் சக்தி!!

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றவேளையில் 20வது திருத்தத்திற்கான தேவைஎன்னவென ஐக்கியமக்கள்சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனநாயக சமூகம் பாதுகாக்கப்படுமா அல்லது நாடு கறைபடிந்த தோற்றத்துடன் தனிமைப்படுத்தலை நோக்கி தள்ளப்படுமா என்பதை தீர்மானிக்கவேண்டிய முக்கியமான தருணத்தில் நாடு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்தும் நாடாக மாறிவருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
முதலீட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் என்னநடக்கும் என கேள்வி எழுப்பியுள்ள இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நீதித்துறையில் நம்பிக்கை இல்லாவிட்டால் முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்யமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வரும்போது அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் வழங்கவேண்டிய நிலையில் முதலீட்டாளர்கள் காணப்பட்டால் அவர்கள் இலங்கை வரமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
20வது திருத்தத்தை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புத்திசாலித்தனமாக சிந்திக்கவேண்டும் குறுகிய அரசியல்வேறுபாடுகளை கைவிடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.