20 ஆவது திருத்தம் குறித்து பிமல் தெரிவித்தது என்ன?

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன அரசியலமைப்பிலிருந்ததை விட ராஜபக்ஷ குடும்பத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்பதற்காக இந்த நிலைமை ஏற்படுத்த இட மளிக்க முடியாது என பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
நீதித்துறை, கணக்காய்வு மற்றும் தேர்தல் ஆணைக்குழு ஆகிய மூன்றையும் ஜனா திபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர புதிய திருத்தச் சட்டத்தின் மூலம் முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் பிமல் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் ஊழலுக்கு முடிசூட்டப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன் னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இத னைத் தெரிவித்தார்.