அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுப்பாட்டை இழந்தமை குறித்து அரசாங்கம் கவலை!!

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழுமையான கட்டுப்பாட்டை இலங்கை இழந்தமை குறித்து அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் ரோகித குணவர்த்தன நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் நாட்டின் பெரும் சொத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய நாடுகளின் முக்கிய துறைமுகங்கள் போல அம்பாந்தோட்டை துறைமுகம் நாட்டின் பொருளாதாரத்தை எதிர்காலத்தில் பலப்படுத்தியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை நேசநாடுகளுடன் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவேண்டியது அவசியம் என தெரிவித்துள்ள அவர்ஆனால் முக்கிய துறைமுகத்தின் கட்டுப்பாட்டை இழந்தது கவலைப்படவேண்டிய விடயம என அமைச்சர் தெரிவித்துள்ளார்.