;
Athirady Tamil News

பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான சட்ட ஆலோசனை!! (வீடியோ, படங்கள்)

0

பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளும் விழிப்புணர்வு கருத்தமர்வு இன்று கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. குறித்த செயலமர்வு இன்று காலை 10 மணியளவில் பூநகரி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆர்.பானுஜா தலைமையில் குறித்த கருத்தரங்கும், செயலமர்வு இடம்பெற்றது. குறித்த கெருத்தமர்வில் சட்டத்தரணி சண்முகநாதன் வைஷ்ணவி சட்ட ஆலோசனைகளையு்ம, விழிப்புணர்வு கருத்துக்களையும் வழங்கியிருந்தார்.

இதன்போது காணி பிரச்சினை, பாலியல் லஞ்சம், பாலியல் சுரண்டல், விவாகரத்து, தாபரிப்பு, வன்முறைகள் தொடர்பான பிரச்சினைகளிற்கு சட்ட ரீதியான ஆலோசனைகள் மற்றும் குற்றங்களிற்கான தண்டனைகள் தொடர்பான விழிப்புணர்வு இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து பெண்கள், இளைஞர்கள் என 150 பேர்வரை பங்கு கொண்டு பயன் பெற்றனர். தொடர்ந்து பெண்களிற்கான ஆளுமை மற்றம் திறண் விருத்திக்கான செயன்முறைப் பயிற்சிகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + sixteen =

*