;
Athirady Tamil News

வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெறும் தகாத செயற்பாடு!! (படங்கள்)

0

வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெறும் தகாத செயற்பாடு! பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட அவசர அறிவிப்பு

வவுனியா பழைய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் வெளி இடங்களிலிருந்து வரும் சில பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு செல்லும் ஏனைய பெண்களையும் வர்த்தக உரிமையாளர்களையும் இச் செயற்பாடு அதிகம் பாதிக்கின்றது.

எனவே நகரின் பிரதான பகுதியில் இடம்பெற்று வரும் பாலியல் தொழிலினைக்கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா நகரசபை உறுப்பினர் பிரபாகரன் ஜானுஜன் எழுத்து மூலமாக பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் அண்மைக்காலமாக பாலியல் தொழிலில் ஈடுபடுவோரின் தொகை அதிகரித்துச் செல்கின்றது. இதனால் பழைய பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

அங்கு வரும் ஆண்கள் சிலர் ஏனைய பெண்களையும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களாக நினைத்து அவர்களிடம் தவறாக நடந்துகொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

எனவே நகரசபை உறுப்பினர் என்ற ரீதியில் இந்நடவடிக்கையினை கட்டுப்படுத்த பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*