மரணதண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விடயத்தில் அரசாங்கம் தலையிடவில்லை- ஜனாதிபதி!!

மரணதண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடயத்தில் அரசாங்கம் தலையிடவில்லை செல்வாக்கு செலுத்தவில்லை என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர்களுடனான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
மரணதண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் நீதிமன்றம் வழங்கியதீர்ப்பில் அரசாங்கத்தின் தாக்கம் உள்ளது என எதிரணியினர் குற்றம்சாட்டமுயல்கின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் தலைமையிலான அரசமைப்புபேரவையின் பரிந்துரையின் அடிப்படையில் நீதிபதியொருவர் நியமிக்கப்பட்டார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியினர் இந்த முடிவை தவறாக அர்த்தப்படுத்த முயல்கின்றனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
20வது திருத்தத்தில் 19வது திருத்தத்தின் சில பிரிவுகள் தக்கவைக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.