நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்க தீர்மானம் – துமிந்த திசாநாயக்க!!

இந்நாட்டில் பணக்காரர் அல்லது குறைந்தவருமானம் பெறுவோர் என்பதைப் பொருட் படுத்தாமல் அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சோலார் பேனல்கள் ஊடாக சூரிய ஒளியைப் பயன்படுத்தி பாடசாலைகளுக்கு மின்சாரம் தயாரிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்க கட்டடங்கள், அரச அமைச்சகங்கள் போன்ற நிறுவனங்கள் சூரிய சக்தியால் இயங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2030 ஆம் ஆண்டில், இந்நாட்டின் மீளுருவாக்கம் சக்தியின் ஊடாக 80% மின்சாரம் உற்பத்தி செய்யும் இலக்கை அடைய பணியாற்றுவதாக அனுராதபுரத்தில் இடம்பெற்ற விழாவில் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.