;
Athirady Tamil News

பொதுமக்கள் தினமாக திங்கட்கிழமை பிரகடனப்படுத்த தீர்மானம் – உதய கம்மன்பில!!

0

60 வருட காலமாக பொது மக்கள் தினமாக புதன் கிழமை இடம்பெற்றிருப்பதாகவும் இனிவரும் நாட்களில் பொது மக்கள் தினமாகத் திங்கட்கிழமை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது என அமைச்சரவை ஊடக பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற் கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

60 வருட காலமாக பொது மக்கள் தினமாகப் புதன் கிழமை இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் அன்றைய தினத்தில் பாராளுமன்ற அமர்வு இடம்பெறுவதினால் அமைச்சர்கள் பாராளுமன்றத்திற்கு சமுகமளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரச நிறுவனங்களில் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக மக்களுக்கு இலகு வான வகையில் புதன்கிழமையை இதுவரைகாலமும் ‘பொதுமக்கள் தினம்’ ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் திங்கட்கிழமை ‘பொதுமக்கள் தினமாக’ பிரகடனப்படுத்தினால் மக்களுக்கு மிகவும் இலகுவாக அமையுமென யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய இனிவரும் நாட்களில் திங்கட் கிழமை ‘பொதுமக்கள் தினமாக’ பிர கடனப்படுத்தவும், அனைத்து அரச நிறுவனங்களின் உத்தியோகஸ்தர்கள் பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் குறித்த தினத்தில் அலுவலகத்தில் கட்டாயமாக இருத்தல் அவசியமெனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*