;
Athirady Tamil News

மஸ்கெலியாவில் விபத்து ஒருவர் படுகாயம் – ஒருவர் கைது!!

0

மஸ்கெலியா நல்லத்தண்ணி பிரதான வீதியில் ஜீப் வண்டியொன்று முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்

மஸ்கெலியா லக்ஷபான 50 ஏக்கர் பகுதியிலே 12/09 காலை 06.30 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது,

கொழும்பிலிருந்து நல்லத்தண்ணி நோக்கி வந்த ஜீப் வீதியோரம் நிறுத்தி வைத்திருந்த முச்சக்கரவண்டியில் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது,

விபத்தினால் முச்சக்கரவண்டி கடும் சேதமாககியதுடன் அதிலிருந்த ஒருவர் காயமடைந்து மஸ்கெலியா வைத்திசாலையில் அனுதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா மாவட்ட. வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளர்,

ஜீப் வண்டியின் சாரதிக்கு நித்திரை வந்ததாலே விபத்து ஏற்பட்டுள்ளதுடன் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 7 =

*