;
Athirady Tamil News

வவுனியாவில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் 5 பேர் கைது!! (படங்கள்)

0

வவுனயாவில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களின் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா சிதம்பரபுரம், தேக்கவத்தை, மாமடு ஆகிய பகுதிகளிலேயே குறித்த 5 பேரும் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்களுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போதே குறித்த போதைப் பொருட்கள் மீட்கப்பட்டன.

வவுனியா மாமடு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 2 கிலோ கேரளா கஞ்சா மற்றும் 2 கிராம் ஹெரோயின் என்பவற்றை மோட்டர் சைக்கிளில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டர் சைக்கிளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சிதம்பரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 420 மில்லிகிராம் மற்றும் 310 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தேக்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட் சோதனையின் போது 390 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 43,000 ரூபாய் பணம் என்பவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − four =

*