;
Athirady Tamil News

டிரக் டிரைவரின் சாமர்த்தியத்தால் மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞர்! ரொம்ப பெரிய அதிர்ஷ்டசாலி! (வீடியோ, படங்கள்)

0

டிரக் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் வீடியோ மற்றும் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் அரங்கேறும் அதிகபட்ச விபத்துகளுக்கு வாகன ஓட்டிகளின் கவனக் குறைவும், போக்குவரத்து விதிமீறல்களுமே முக்கிய காரணமாக உள்ளன. இதனை உறுதிப்படுத்தக்கூடிய ஓர் சம்பவமே கேரள மாநிலத்தில் தற்போது அரங்கேறியிருக்கின்றது. அதுகுறித்து வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சி மற்றும் தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

தனக்கு முன்னாள் செல்லும் வாகனங்களை வேகமாக முந்திவிட வேண்டும் என நினைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை அதிக வேகத்தில் இளைஞர் ஒருவர் ஓட்டியதனாலயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. பொதுவாக இதுமாதிரியான விபத்து சம்பவங்களில் பெரிய வாகனங்கள் (லாரி அல்லது பேருந்து) மீதே குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்.

ஆனால், தற்போதைய சம்பவத்தில் ஸ்கூட்டரை ஓட்டி வந்த இளைஞர் மீதுதான் தவறு என்பது மிக துள்ளியமாக தெரிகின்றது. மிகப்பெரிய உருவம் கொண்ட வாகனங்களில் இருக்கும் போது, அதன் அருகில் செல்லும் வாகனங்களை தெளிவாக காண்பது மிக கடினமான ஒன்று.

எனவேதான் நீளமான மற்றும் பெரிய உருவமுடைய வாகனங்களைக் கடக்கும்போது சற்று இடைவெளி விட்டவாறு பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. இதை கடைப்பிடிக்காத நிலையிலேயே சில வேண்டத்தகாத நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.

தற்போதைய சம்பவத்தில் டிரக் டிரைவரின் சாமார்த்தியத்தால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ஆம், விரைந்து வந்த ஆக்டிவா டிரைவரை டிரக்கின் முன் வீல்கள் பதம் பார்ப்பதற்கு முன்னரே வாகனத்தை நிறுத்தி இளைஞரின் உயிரை டிரக் டிரைவர் காப்பாற்றியுள்ளார். இதற்காக அவருக்கு இணையத்தில் பாராட்டு மழை பொழிந்து வருகின்றது.

அதேசமயம், கண் மூடித்தனமாக சாலை விதிமுறையைக் கடைப்பிடிக்காமல் வந்த ஆக்டிவா ஓட்டுநருக்கு கண்டனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஆக்டிவா ஸ்கூட்டரை ஓட்டி வந்த இளைஞர் விபத்தில் சிக்குவதற்கு பாதசாரி ஒருவரும் காரணமாக உள்ளார்.

ஆனால், அந்த பாதாசாரி மீதும் முழுமையான குற்றச்சாட்டை நம்மால் முன் வைக்க முடியாது. ஏனெனில், அவர் தவறான பாதையில் வாகனம் எதுவும் வராது என்ற எண்ணத்தில், தான் கடக்கும் பாதையை மட்டுமே கவனித்தவாறு கடந்தார். அந்த நேரத்தில்தான் அதி வேகத்தில் வந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் எதிர்பாராத விதமாக அவர் மீது லேசாக உராய்ந்தவாறு மோதி கீழே சரிந்தது.

இதைச் சத்தத்தின் மூலம் சுதாரித்துக் கொண்ட டிரக் டிரைவர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி பெரும் விபத்தைத் தவிர்த்தார். இதற்கு டிரக் வளைவில் மிக பொறுமையாக திரும்பியதும் ஓர் காரணமாக உள்ளது. வளைவு அல்லாத இடமாக இருந்திருந்தால் நிச்சயம் சூழல் விபரீதமானதாக மாறியிருக்கும்.

அதி வேகத்தில் டிரக்கைக் கட்டுப்படுத்துவது சற்று சிரமமான விஷயம். எனவே, இந்த சூழல் பலருக்கு பேராபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே, மயிரிழையில் உயிர் தப்பிய ஸ்கூட்டர் ஓட்டி, லாரி டிரைவருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

இதுபோன்ற காரணங்களுக்காகதான் வாகன ஓட்டிகள் முறையான பாதையில், குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக, சாலையில் செல்லும்போது குறுக்கு வழிகளைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் கூறப்படுகின்றது. ஆனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் இதைக் கடைப்பிடிப்பதே இல்லை.

குறிப்பாக, வளைவுகளில் பிற வாகனங்களை முந்திச் செல்வதை வாகன ஓட்டிகள் முற்றிலுமாக தவிர்ப்பது அவர்களுக்கு மட்டுமின்றி சக வாகன ஓட்டிகளுக்கும் நலனை பயக்கும். இதேபோன்று மிகப்பெரிய உருவம் கொண்ட வாகனங்களை ஓவர்டேக் செய்வதை தவிர்த்தல் அல்லது அதிக கவனத்துடன் கடப்பதும் மிகச் சிறந்தது ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 5 =

*