;
Athirady Tamil News

ஐக்கியதேசிய கட்சியின் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகலாம்!!

0

ஐக்கியதேசிய கட்சியின் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகலாம் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக இது குறித்த தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலத்தின் பின்னர் நாங்கள் இணக்கப்பாட்டை நோக்கி செல்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியதேசிய கட்சியை முற்றாக மாற்றுவது குறித்தும் கடந்த வாரம் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன,என தெரிவித்துள்ள கட்ச வட்டாரங்கள் வேறு முக்கிய மாற்றங்கள் இடம்பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளன.
கட்சியின் புதிய தலைவர்களாக வரக்கூடியவர்களின் இறுதிப்பட்டியலொன்று தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − eleven =

*