வவுனியாவில் சிவில் பாதுகாப்பு திணைக்கள அலுவலகம் திறந்து வைப்பு!! (படங்கள்)
வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அலுவலகம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டது.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற ரியத் அட்மிரல் சரத் வீரசேகர அவர்களால் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
சிவில் பாதுகாப்பு பிரிவினரின் சேவைகளை விஸ்தரித்து அவர்களுக்கான தேவைகளை பெற்றுக் கொடுக்கும் முகமாக குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் சிவில் பாதுகாப்பு திணைக்கள வவுனியா அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதில் சிவில் பாதுகாப்பு திணைக்கள வவுனியா வலய கட்டளை அதிகாரி ருவான் மிலாவான், பொலிஸ் அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”