திலீபன் குறித்து கமால்குணரட்ண தெரிவித்திருப்பது என்ன?

திலீபன் நோய்காரணமாகவே உயிரிழந்தார் என பாதுகாப்பு செயலாளர் கமல்குணரட்ண தெரிவித்துள்ளார்
பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டள்ள சிறைக்கைதிகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உண்ணாவிரதமிருந்து மரணித்த ஒரேயொரு நபர் திலீபன் மாத்திரமே என அவர் தெரிவித்துள்ளார்.
தீலிபன் உண்ணாவிரதத்தினால் மரணமடையவில்லை நோயினால் மரணமடைந்தார் என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் அவர் நோயாளி என தெரிந்தே பிரபாகரன் அவர் உண்ணாவிரதமிருப்பதற்கு அனுமதித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உண்ணாவிரதமிருப்பவர்கள் ஓரிருநாட்களில் அதனை கைவிட்டுவிடுவார்கள் அது குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளதேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.