;
Athirady Tamil News

தீவிரவாதிகள் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்போவதில்லை – இராணுவதளபதி!!

0

இலங்கையில் தீவிரவாதத்துக்கு இடமளிக்கப்போவதில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு இடமளிக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மாதுரு ஓயாவில் இடம்பெற்ற இராணுவநிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டினை பாதுகாப்பு நிலவரம் குறித்து இராணுவம் எச்சரிக்கையுடன் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது அமைதி காணப்படுகின்றது ஆனால் உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் போன்றவை இடம்பெறலாம் என தெரிவித்துள்ள சவேந்திரசில்வா அவ்வாறான தாக்குதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

எந்த அச்சுறுத்தலையும் இராணுவம் எதிர்கொள்வதற்கான வளங்களையும் தலைமைத்துவத்தையும் வழங்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தயாராகயுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தங்கள் உட்பட நாடு எதிர்கொள்ளக்கூடிய எந்த சவாலையும் எதிர்கொள்ள இராணுவம் தயாராகவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − three =

*