;
Athirady Tamil News

அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்வு கோரி வசந்தபுரம் மக்கள் கவனயீர்ப்பு!! (படங்கள்)

0

நாவாந்துறை, வசந்தபுரம் மக்கள், அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்வு வழங்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தனர்.

நாம் வாழ்வதற்கான கவனயீர்ப்புப் போராட்டம் என்று குறிப்பிட்டுள்ள அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

உடைக்கப்பட்ட வீடுகள் எங்கே? நமக்கு ஏன் பாரபட்சம்? மழை வெள்ளத்திலிருந்து எம்மைக் காப்பாற்றுங்கள், குடிதண்ணீர் வசதியைப் பெற்றுத் தாருங்கள், எமக்கான நீதி எங்கே? உள்ளிட்ட வாசகங்களைத் தாங்கியவாறு அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*