;
Athirady Tamil News

சிகிச்சை பெறுவோரைவிட 3.8 மடங்கு அதிகம்… இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடையும் விகிதம் அதிவேக உயர்வு..!!

0

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 94,372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,114 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 78,586 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,02,596 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.65 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 77.88 சதவீதமாகவும் உள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “கடந்த மே மாதம் 50,000 ஆக இருந்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 36 லட்சமாக அதிகரித்துள்ளது. தினந்தோறும் அதிகபட்சமாக 70,000 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைகின்றனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.8 மடங்கு அதிகமாக உள்ளது.

தினந்தோறும் செய்யப்படும் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், தொற்று கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணித்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் காரணமாக இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 9 =

*