பொம்மைவெளி வசந்தபுரம் பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு !! (வீடியோ)

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொம்மைவெளி வசந்தபுரம் பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதாக கூறி பழைய வீட்டை இடித்து புதிய வீட்டுத் திட்டத்திற்கு தயாராகுமாறு கூறிய அரச அதிகாரிகளினால் இந்த கூட்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இதுவரை குறித்த பிரதேச மக்களுக்கு வீடு திட்டம் எதுவும் வழங்கப்படவில்லை. மிகவும் தாழ் நிலப் பிரதேசமான வசந்தபுரம் பொம்மை வெளி மக்கள் மழை காலத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் அவர்களுக்கு தற்பொழுது வீடு எதுவும் இல்லை. அரசாங்க அதிகாரிகளால் பழைய வீட்டினை அழித்து புதிய வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் இந்த அரசாங்கத்தினால் வீடு திட்டத்திற்கான படங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.
அத்துடன் அரச அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் நடந்து கொள்வதாகவும் தாம் விட்டுட்டு இருந்து புறக்கணிக்கப்படுவதாக முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் கூறினார்.
குறிப்பாக இந்த பிரதேசத்தில் 92 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் பிரதேச மக்கள் தற்போது மழை காலம் நெருங்குவதால் தங்களுக்கான வீட்டு தின்னை துரிதப்படுத்தி தாங்கள் வசிப்பதற்கு ஒரு வீட்டினை அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் தமக்கான வீட்டு திட்டம் மலசல கூடம் குடிநீர் உள்ளிட்ட அடிப்டை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு பல தரப்பினரிடமும் கோரிக்கு விடுத்திருந்த போதிலும் அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை என கவலை வெளியிட்டுள்ள இப் பகுதி மக்கள் தமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருமாறு ஐனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”