பிரான்சை விடாத கொரோனா – ஒரே நாளில் 10561 பேருக்கு பாதிப்பு..!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரசின் தாக்கம் ஐரோப்பிய நாடான பிரான்சில் குறைந்திருந்த நிலையில், தற்போது தீவிரமடைந்து வருகிறது.
அந்நாட்டில் ஒரே நாளில் 10 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு 3 லட்சத்து 73 ஆயிரத்து 911 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு கொரோனா தாக்குதலுக்கு ஒரே நாளில் மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் பிரான்சில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது.