;
Athirady Tamil News

சஜித்திற்கு பதில் புதிய பிரதிதலைவர் – ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தகவல்!!

0

ஐக்கிய தேசிய கட்சி சஜித்பிரேமதாசவுக்கு பதில் புதிய பிரதிதலைவரை நியமிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய பதவிகளுக்கு புதிதாக தெரிவு செய்யப்படுபவர்கள் இந்த நியமனத்தை மேற்கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியதேசிய கட்சியின் செயற்குழு இதன் பின்னர் இந்த நியமனம் குறித்து ஆராயும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் பிரதிதலைவர் பதவியிலிருந்து சஜித் பிரேமதாச நீக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள அகிலவிராஜ் பொதுத்தேர்தலுக்காக ஐக்கியமக்கள் சக்தியில் இணைந்த ஐக்கியதேசிய கட்சியின் 54 உறுப்பினர்களை நீக்கும்முடிவை தொடர்ந்தே சஜித்பிரேமதாசவும் பிரதிதலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − seven =

*