;
Athirady Tamil News

பொருளாதார நிலை, வேலையின்மை மிகப்பெரிய சவால்கள் -மக்களவையில் சுப்ரியா சுலே பேச்சு..!!

0

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மக்களவை காலை 9 மணிக்கு அவைத்தலைவர் ஓம் பிர்லா தலைமையில் கூடியது. மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து ஒரு மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் அவை நடவடிக்கைகள் தொடங்கின. மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே பேசும்போது, நாட்டில் தற்போது பொருளாதார நிலை மற்றும் வேலையின்மை மிகப்பெரிய சவாலாக உள்ளன என்றார். கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பொருளாதார நிலை, கொரோனா பெருந்தொற்று மற்றும் வேலையின்மை சவால்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

‘இது ஒரு உலகளாவிய சூழ்நிலை. நமது நாடு மட்டும் இதை கடந்து செல்லவில்லை. ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த அரசு பொருளாதாரம் அல்லது வேலையின்மை சவால்களைப் பற்றி விரிவாகப் பேசியதாக தெரியவில்லை. நாம் அதை முன்னுரிமையில் வைக்க வேண்டும்’ என்றும் சுப்ரியா சுலே வலியுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + three =

*