;
Athirady Tamil News

பொம்மைவெளி வசந்தபுரம் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை!! (வீடியோ, படங்கள்)

0

தமக்கான விட்டுத்தாட்டத்தினை வழங்குமாறு கேரி நேற்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொம்மைவெளி வசந்தபுரம் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சன் இந்திக்க அனுருத்த மற்றும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதனும் ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்று மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.

இதன்போது மக்களிடம் தமது பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த விடையத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த பிரிச்சினைக்கு விரைவில் தீர்வு கானப்படும் என மக்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 19 =

*