;
Athirady Tamil News

யாழ் அரசாங்க அதிபர் க. மகேசன் தலைமையில் பட்டதாரி பயிலுனர்களிற்கான பயிற்சிகள்!! (வீடியோ, படங்கள்)

0

யாழ்ப்பாண மாவட்டத்தில் முதல் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களிற்கான ” திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகள்” தொடர்பான பயிற்சிகள் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்களின் தலைமையில் இன்று காலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடப்பெற்றது.

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிப் பயிலுநர்களுக்கான பயிற்சி அரசாங்கத்தின் “சுபீட்சத்தின் நோக்கு”என்ற தொனிப்பொருளின் கீழ் தலைமைத்துவம், முகாமைத்துவம், அரச திணைக்களங்கள் தொடர்பான விடய ஆய்வு, தனியார் திணைக்களங்கள் தொடர்பான விய ஆய்வு, திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகள் தொடர்பாக ஐந்து பிரிவுகளாக பயிற்சிகள் ஆரம்பமாகவுள்ளது.

இப் பயிற்சி தொடர்பான ஆரம்ப கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் க. மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன், பிரிகேடியர் ஜானக விஜயசிறி, பிரிகேடியர் நிலாந்த பிறேமரத்ன, மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர்,யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் ஜீவசுதன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிப் பயிலுநர்கள் கலந்து கொண்டார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*