;
Athirady Tamil News

கடத்தல்காரர்களின் சொத்துக்கள் குறித்து பிரதமர் வழங்கியுள்ள ஆலோசனை!!

0

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்குவது தொடர்பில் ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சட்ட மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இதனை தெரிவித்தார்.

கடத்தல்காரர்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஏனையவர்களுக்குக் கைமாற்றுவதற்கும் விற்பனை செய்யவும் தடை விதிக்க தேவையான உரிய வேலைத் திட்டங்களைத் தயாரிக்குமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியதாக, பிரதமரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கு தேவையான நீதிமன்ற கட்டளையை விரைவில் பெற்று இந்த செயற்பாடுகளை வினைத்திறனுடன் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடத்தல்காரர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்கு வதற்குத் தேவையான சட்டங்களில் திருத்தங்கள் மேற் கொள்ள வேண்டும் எனின் அதற்கு தேவையான நடவடிக் கைகளையும் முன்னெடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தி யுள்ளார்.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரர்களின் அரசுடைமையாக்கப்படவுள்ள சொத்துக்களில் 749 மில்லி யன் ரூபா பெறுமதியான காணியும் அவர்களுக்குச் சொந் தமான 89 வாகனங்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*