ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நால்வர் கைது!!

ஹெரோயின் போதைப் பொருளை தமது உடைமையில் வைத்திருந்த நான்கு சந்தேக நபர்கள் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
45 வயது மதிக்கத்தக்க முதலாவது சந்தேக நபர் தனது உடைமையில் 10.56கிராம் போதைப்பொருளை வைத்திருந்ததாக காலி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இரண்டாவது சந்தேக நபர்(26 வயது) 9.8கிராம் போதைப்பொருளை தனது உடைமையில் வைத்திருந்ததாக பயகல, மக்கொன பிரதேசத்தில் கைதானார்.
மூன்றாவது சந்தேக நபர் (வயது 43) 10 கிராம் போதைப்பொருளை வைத்திருந்ததாக வெலிப்பன பிரதேசத்திலும் நான்காவது சந்தேக நபர் (வயது 44) 2.11கிராம் போதைப்பொருளை வைத்திருந்தாக காலி தலப்பிட்டிய பிரதேசத்திலும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த நான்கு சந்தேக நபர்களும் சம்பந்தப்பட்ட மஜிஸ்ரேட் நீதிமன்றங்களில் இன்று ஆயர் செய்யப்பட்டனர்.