;
Athirady Tamil News

20வது திருத்தத்தின் நகல்வடிவில் காணப்பட்ட தவறுகளைதிருத்த நடவடிக்கை – உதயகம்மன்பில!!

0

20வது திருத்தத்தின் நகல்வடிவில் காணப்பட்ட தவறுகளை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
மக்கள் தவறுகள் இழைப்பது இயல்பு அதனை திருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதே முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய இழப்புகளை சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்போன்ற நிறுவனங்களை கணக்காய்வு செய்யவேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முன்னெடுக்கும் கணக்காய்வு நடவடிக்கையின் கீழ் அவ்வாறான நிறுவனங்களை கொண்டுவரவேண்டும் என நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தினை கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
20வது திருத்த நகலை மீளாய்வு செய்த குழுவின் பரிந்துரைகளை ஜனாதிபதியும் பிரதமரும் கருத்தில்கொள்வார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*