;
Athirady Tamil News

யூரேஸியா என்ற புதிய கண்டத்தை உருவாக்குகிறது சீனாவின் மண்டலமும் பாதையும் செயற்திட்டம்; டியூ.குணசேகர!!

0

கொழும்பு (சின்ஹூவா), சீனாவின் மண்டலமும் பாதையும் செயற்திட்டம் (Belt and Road Initiative – BRI) அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு பயனுடையதாகவும் உலக விவகாரங்களில் பல்துருவ அணுகுமுறையை உருவாக்குவதாகவும் அமைகிறது. அந்த செயற்திட்டத்தில் மிகவும் முன்னதாகவே கலந்துகொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் நடைமுறைப்படுத்தலின் விளைவாகவும் இலங்கையின் சக்திவலு செயற்திட்டங்களுக்கும் உட்கட்டமைப்பு நிர்மாணத்திற்கும் சீனாவின் பெருமளவு முதலீட்டின் விளைவாகவும் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் புதிய உச்சத்தை அடைந்திருக்கின்றன என்று ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான டியூ.குணசேகர சின்ஹூவாவிற்கு தெரிவித்தார்.

சீனாவின் பட்டுப்பாதை பொருளாதார வலயத்தையும் 21 ஆம் நூற்றாண்டின் கடல் பட்டுப்பாதையையும் குறிக்கும் மண்டலமும் பாதையும் செயற்திட்டம் ஐரோப்பாவுடனும் ஆபிரிக்காவுடனும் புராதன வாணிப மார்க்கங்களின் ஊடாக இணைக்கும் வர்த்தக, முதலீட்டு மற்றும் உட்டகட்டமைப்பு வலைப்பின்னல் ஒன்றைக் கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்டதாகும் என்றும் குணசேகர குறிப்பிட்டார்.

சீனாவின் அபிவிருத்தி ஆபிரிக்காவ, இலத்தீன் அமெரிக்கா மற்றும் யூரேஸியாவில் புதிய பொருளாதார மையங்களின் தோற்றத்துடன் கூடிய பல்துருவ உலகொன்றின் உருவாக்கத்திற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் வரை 16 வருடங்களாக ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகப் பணியாற்றிய டியூ குணசேகர சின்ஹூவாவுடனான குறுகிய நேர்காணலொன்றில் கூறினார்.

“மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் விளைவாக யூரேஸியா என்ற புதிய கண்டமொன்று வெளிக்கிளம்புகிறது. உலகப்பொருளாதாரத்தின் முன்னரங்கப்படையாக ஆசிய பொருளாதாரம் இன்று விளங்குகிறது” என்று கூறிய குணசேகர, “இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு சீனாவுடனான ஒத்துழைப்பும் உறவுகள் மேம்பாடும் அத்தியாவசியமானது. அவ்வாறானால் தான் தேசிய நலன்களைப் பாதுகாக்க முடியும் என்பதுடன் சீனாவின் பிரம்மாண்டமாட சந்தையையும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

1952 ஆம் ஆண்டில் சீனாவுடன் இறப்பர் – அரிசி உடன்படிக்கையை கைச்சாத்திட வேண்டும் என்றும், 1957 இல் கம்யூனிஸ்ட் சீனாவுடன் முறைப்படியான இராஜதந்திரத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அன்றைய கொழும்பு அரசாங்கங்களை நம்பவைப்பதில் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமொன்றை வகித்தது என்று பெருமிதத்துடன் கூறினார் இந்த கம்யூனிஸ்ட் தலைவர்.

சீனாவின் அபிவிருத்திப் போக்குகள் குறித்து கருத்துத் தெரிவித்த குணசேகர, 1980 களில் சீனாவில் ஷென்ஷென் பகுதிக்கு விஜயம் செய்த ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவில் தானும் ஒரு உறுப்பினராக இருந்ததை நினைவுகூர்ந்தார். தாங்கள் அந்த விஜயத்தை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் தான் தென்சீனாவில் அந்த விவசாயக்கிராமத்தின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. இன்று அந்தப் பகுதி ஒரு உலக தொழில்நுட்ப கேந்திர மையமாக மாற்றப்பட்டிருப்பதைக் காண்கிறோம் என்று சொன்னார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*