;
Athirady Tamil News

தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தயார் – கெ முனு விஜயவர்தன!!

0

கொழும்பு பகுதியில் செயற்பட்டு வரும் புதிய பாதை அமைப்பு தொடர்பாக தாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரு வதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பஸ் வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக் கிள்களைச் செலுத்த பொலிஸார் எடுத்த முடிவு தவறா னது என தனியார் போக்குவரத்து சங்கத் தலைவர் கெ முனு விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானத்தை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை என்றால் அனைத்து தனியார் வாகனங் களும் நிறுத்தப்பட்டு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள தாக அவர் தெரிவித்தார்.

பஸ் பாதை தொடர்பாக வர்த்தமானியில் வெளியிடப் பட்டுள்ளது.

இந்நிலையில், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பஸ் பாதைகளில் செல்வது சட்டவிரோத மானது என்றும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் புதிய முறையின் காரணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் இருப்பதாக வும், இதுபோன்ற விபத்து ஏற்பட்டால், அதற்கு பொலி ஸாரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இருவழி பாதைகள் மட்டுமே உள்ள வீதிகளில் சட்டத்தை அமுல்படுத்துவது நடைமுறையில்லை எனக் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 12 =

*