;
Athirady Tamil News

காளஹஸ்தி கோவிலில் புதிதாக சிலை வைத்த 3 பேர் கைது..!!

0

காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன் கோவில் நிர்வாகத்துக்கு தெரியாமல், பரிவார தேவதைகள் சந்நிதியில் ஒரு சிறிய சிவலிங்கம் மற்றும் நந்தி சிலை புதியதாக வைக்கப்பட்டது.

முறையாக பிரதிஷ்டை செய்யப்படாத சிலைகள் கோவிலுக்குள் இருந்தால், அவற்றால் தோ‌ஷம் ஏற்படும் என்று கூறிய கோவில் குருக்கள் தோ‌ஷத்தைக் களைய கலசபூஜைகள், புண்ணியாவாசனம் உள்ளிட்டவற்றை செய்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு ஆந்திர அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் விவரங்கள் பொது முடக்க விதிகளின்படி பதிவு செய்யப்படுகிறது.

கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில், கடந்த வாரம் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வந்ததால், நுழைவு வாயில்கள் முன்பு கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் பலர் நேரடியாக வந்து பக்தர்களை அனுமதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கோவிலுக்குள் சென்ற பக்தர்கள் பலரிடமும் பைகள் இருந்தன. அன்று கோவிலில் பாதுகாப்பு ஊழியர்கள் நுழைவு வாயில் அருகில் பணியில் ஈடுபடுத்தப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

கோவிலுக்குள் தரிசனத்துக்காக செல்லும் பக்தர்கள் அனைவரும் பூஜைப் பொருட்கள், செல்போன், பெரிய உடமைகள் ஆகியவற்றைக் கொண்டு செல்ல ஞாயிற்றுக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியும் நடந்து வருகிறது.

இந்நிலையில், கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து, சந்தேகத்துக்கு இடமான 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் புதிதாக சிலை வைத்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களுடன் காளஹஸ்தியை சேர்ந்த ஒரு வியாபாரிக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − 2 =

*