;
Athirady Tamil News

வவுனியாவில் வயல் காணி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு!!

0

வவுனியாவில் வயல் காணி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் காணப்படும் வயல் காணிக்கு மண்நிரவி மதில் அமைக்கும் பணியை நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்களினால் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நேற்று மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது .

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில் ,

வவுனியா இறம்பைக்குளம் சங்கரப்பிள்ளை வீதியின் வலப்பக்கம் காணப்படும் குளத்தை அண்டிய வயல் காணிக்கு உரிமை கோரும் சிலரால் அப்பகுதிக்கு மண் நிரவி மதில் அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகின்றனர் . எனவே இவ்வாறு வயல் காணிக்கு மண் நிரவி மதில் அமைப்பதால் குளத்திற்கு செல்லும் மழை வெள்ளம் தேங்கி அப்பகுதியில் மழைகாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாய நிலை காணப்படுகின்றது .

எனவே இதனால் அப்பகுதியை சூழவுள்ள பகுதியில் குடியிருக்கும் எமக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படும் நிலை காணப்படுவதுடன் அங்குள்ள ஆலயத்திற்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்நடவடிக்கையினை உடன் தடுத்து நிறுத்துமாறு கோரி அங்கு வசிக்கும் மக்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்று நேற்று பிற்பகல் வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளர் .

இவ்விடயம் குறித்து வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது , நடவடிக்கை மேற்கொள்வதற்காக அம் மகஜர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 16 =

*