;
Athirady Tamil News

பொலிசாரின் கோரிக்கைக்கு!! நீதிமன்றம் தடை!!

0

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவிழா நிகழ்வினை நடாத்துவதற்கு பொலிசாரால் கோரப்பட்ட தடை உத்தரவு விண்ணப்பத்தை வவுனியா நீதவான் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நாளையதினம் திருவிழா நிகழ்வுகள் நடைபெறவிருந்த நிலையில் அதனை தடுக்கும் விதமாககுற்றவியல் சட்டக்கோவையின் 106வதுபிரிவின் கீழ் தடைஉத்தரவு விண்ணப்பம் ஒன்றினை வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் கோரியிருந்தனர்.

இன்றையதினம் இதனை ஆராய்ந்த நீதிபதி பொலிசாரால் கோரப்பட்ட குறித்த தடை உத்தரவு விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், திருவிழா நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.

குறித்த வழக்கில் ஆலயத்தின் நிர்வாகத்தினர் சார்பில் ஐனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில்10 ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆயராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வழக்கில் ஆயராகியிருந்த சட்டத்தரணிகளில் ஒருவரான காண்டீபன் கருத்து தெரிவித்த போது…..

தொல்பொருட் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுப்பிய கடிதத்தினை சார்பாகவைத்து, விழாக்கள் இடம்பெறும் போது தொல்பொருளியல் சாதனங்களுக்கு சேதம் விளைவித்துவிடும் என்றவகையில் குறித்த தடை உத்தரவு பொலிசாரால் கோரப்பட்டிருந்தது.

106 பிரிவின் கீழே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் போது மட்டுமே பொலிசார் அதனை கையாளமுடியும்.ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் இல்லாமல் அவர்கள் இந்த விடயத்தில் தான்தோன்றித்தனமாக,எதேச்சியதிகாரமாக இதனை கையாண்டுள்ளனர்.அந்தபிரிவின் ஏற்பாடுகளை நன்கு அறிந்திருந்தும் இவ்வாறானதொரு விண்ணப்பத்தை செய்து நிகழ்வை தடுப்பதற்கு போலிசார் முனைந்துள்ளனர் எனினும் நீதிமன்றம் அதை நிராகரித்துள்ளது என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 8 =

*