;
Athirady Tamil News

அதிகாரங்கள் குறைக்கப்பட்ட ஜனாதிபதி முறையை ஆதரிக்கின்றேன்- எதிர்கட்சி தலைவர்!!

0

அதிகாரங்கள் குறைக்கப்பட்ட நிறைவேற்று அதிகார முறைக்கு ஆதரவளிப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்றில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை உறுதியாக ஆதரித்தவன் எனினும் 2014 முதல் 2015 வரை இடம்பெற்ற விடயங்கள் காரணமாக அதிகாரங்கள் குறைக்கப்பட்ட ஜனாதிபதி முறையை விரும்பத்தொடங்கினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தின் மூன்று தூண்களும் ஒன்றை மற்றொன்று பலவீனப்படுத்த முயலாத முறையை நாங்கள் உருவாக்க முயல்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
தேவையேற்படும் போது காங்கிரஸ் செனெட் ஜனாதிபதி ஆகியோர் ஒன்றாக இணைந்து செயற்படுவதற்கான சிறந்த உதாரணம் அமெரிக்கா எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இராணுவநடவடிக்கைபோன்ற ஒன்றை முன்னெடுப்பதற்கு முன்னர் அனைத்து கட்சிகளும் இரகசிய கலந்தாலோசனையை மேற்கொள்ளும் முறையொன்று அமெரிக்காவில் உள்ளது என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை அவ்வாறான முறையொன்றை கொண்டிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி 20வது திருத்தத்தை தோற்கடிப்பதற்காக பாடுபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 6 =

*