;
Athirady Tamil News

புகையிரதக்கடவை காப்பாளர்களுக்கு போக்குவரத்து அமைச்சர் வாக்குறுதி!!

0

அகில இலங்கை ரீதியில் புகையிரதக்கடவை காப்பாளர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இன்று (16) கொழும்பில் போக்குவரத்து அமைச்சரை வடக்கு கிழக்கு புகையிரதக்கடவை காப்பாளர் சங்கத்தின் தலைவர் தலைமயில் சென்ற குழுவினர் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

புகையிரதக்கடவை காப்பாளர்களுக்கா நிரந்தரத் தீர்வை புகையிரதத் திணைக்களத்துடன் மற்றும் ஜனாதிபதியுடன் பேசி ஒரு வாரத்தில் தீர்வு பெற்றுத் தருவதாக போக்குவத்து அமைச்சர் வாக்குறுதி வழங்கியுள்ளதாக வடக்கு கிழக்கு புகையிரதக்கடவை காப்பாளர் சங்கத்தின் தலைவர் றொகான் ராஜ்குமார் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் இணைச் செயலாளர் எம்.பி. கல்கெட்டியின் தலைமையில் சென்று போக்கு வரத்து அமைச்சர் காமினி லெக்குகேயை சந்தித்ததுடன் புகையிரதக் கடவை ஊழியர்களின் பிரச்சனை தொடர்பான மனுவை கையளித்திருந்தனர்.

ஜனாதிபதி விசேட அத்தியட்சகர் பந்து நிமல் வாதிஸ்ட அவர்களை 02-09-2020 அன்று சந்தித்த புகையிரதக்கடவை கடவை காப்பாளர்கள் நிரந்தர நியமனம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தினால் போக்குவரத்து அமைச்சர் மற்றும் புகையிரதத்திணைக்களத்தின் பொது முகாமையாளருக்கு புகையிரதக்கடவை ஊழியர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நிரந்தர தீர்வை ஒரு வாரத்தில் பெற்றுத்தருவதாக போக்குவரத்து அமைச்சர் வாக்குறுதி வளங்கியுள்ளதாக வடக்கு கிழக்கு புகையிரதக்கடவை காப்பாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*