;
Athirady Tamil News

தமிழ் நிலம் மக்கள் அமைப்பினரால் குளாய்கிணறு கையளிப்பு!! (படங்கள்)

0

முல்லைத்தீவு விஸ்வமடு இளங்கோபுரம் பகுதியில் குளாய் கிணறு அமைக்கப்பட்டு தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் தலைவர் வி.விநோகரன் தலைமையில் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

தமிழ் நிலம் மக்கள் அமைப்பினரால் தொடர்ச்சியாக வாழ்வாதார உதவிகள் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு வழங்கி வரும் நிலையில் பெற்றோரை இழந்த குடும்பத்திற்கு நீர் தேவை இருப்பதை இனங்கண்டு நெல்லியடி மைக்கல் நேசக்கரத்தின் ஒருங்கிணைப்பின் ஊடாக குளாய் கிணறு அமைப்பதற்கான நிதி உதவியினை சுவிஸ்லாந்து லுட்சேன் துர்க்கை அறக்கட்டளை வழங்கியுள்ளது.

வன்னி மாவட்டத்தில் புலம்பெயர் நிதியில் மனிதாபிமான சேவைகளின் ஊடாக வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களின் தேவைகள் கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*